திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டீனாக பணியாற்றி வந்த பெருவழுதி புதிய பதிவாளராக (பொறுப்பு)
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
Published on

சிப்காட் (ராணிப்பேட்டை),

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் டீனாக பணியாற்றி வந்த பெருவழுதி புதிய பதிவாளராக (பொறுப்பு)வும், விலங்கியல் துறை தலைவராக பணியாற்றி வந்த செந்தில்குமார் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக (பொறுப்பு) நியமிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நியமனங்களை எதிர்த்து நேற்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பல்கலைக்கழகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு போராட்டகுழுவின் தலைவரும், முன்னாள் பதிவாளருமான (பொறுப்பு) அமுல்தாஸ் தலைமை தாங்கினார்.

பல்கலைக்கழகத்தில் பணிமூப்பின் அடிப்படையில் தகுதியுள்ள பேராசிரியர்களுக்கு பதிவாளர் (பொறுப்பு), தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்(பொறுப்பு), நிதி அலுவலர் (பொறுப்பு) ஆகிய பதவிகளை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

இதில் போராட்டக்குழு செயலாளர் ஷபி, துணை தலைவர் ஆறுமுகம் உள்பட பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியகள், போராட்டகுழுவினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com