ஷேர் மார்க்கெட்’ தொழிலில் நஷ்டம்: விஷம் குடித்து பெண் தற்கொலை

ஷேர் மார்க்கெட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஷேர் மார்க்கெட்’ தொழிலில் நஷ்டம்: விஷம் குடித்து பெண் தற்கொலை
Published on

கடத்தூர்,

கோபி அருகே உள்ள ஒட்டர்கரட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகள் நிர்மலாதேவி (வயது 30). திருமணம் ஆகவில்லை.

இவர் ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இந்த தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மணமுடைந்து காணப்பட்ட அவர், இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிர்மலாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com