கோவில்பட்டி அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்

கோவில்பட்டி அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்
கோவில்பட்டி அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் பிணம்
Published on

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே உள்ள வேலாயுதபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் எதிரே, ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று காலையில் ரெயிலில் அடிப்பட்ட நிலையில் தலையில் காயங்களுடன் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் கருப்பு நிற பேண்டும், காக்கி நிற சட்டையும் போட்டிருந்தார். தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவருடைய உடலை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தண்டவாளத்தை கடக்கும் போது ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com