மம்தா பானர்ஜி படத்தை எரித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மம்தா பானர்ஜி படத்தை எரித்து கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மம்தா பானர்ஜி படத்தை எரித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

கும்பகோணம்,

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் பாலா தலைமை தாங்கினார். மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் ரவி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள ஜியாகஞ்ச் நகரில் தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேலை பார்த்து வரும் போந்து பிரகாஷ்பால், அவரது மனைவி பியூட்டிபால்(வயது30) , மகன் அங்கன்பந்துபால் (8) ஆகியோர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலையாளிகளை கைது செய்யாமல் உள்ள மேற்கு வங்காள அரசை கண்டித்தும், மம்தா பானர்ஜி பதவி விலக கோரியும், அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு தீர்ப்பு வரும் தருணத்தில் இதுவரை பா. ஜனதா மற்றும் இந்து மகா சபா நிர்வாகிகள் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மேற்குவங்காள மாநில முதல்- மந்திரி மம்தா பானர்ஜி படத்தை எரித்து கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட மாணவரணி தலைவர் லோகேஷ், செயலாளர் நவீன், அமைப்பாளர் அரவிந்தன், சரவணன், அனிதா நகர தலைவர் கண்ணன் இந்து மகா சபா நிர்வாகிகள், பா.ஜனதா நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com