கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

தேவர்குளம் பகுதியில் அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கில் தொடர்புடைய தேவர்குளத்தை சேர்ந்த ஜெகதீஷ் (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

மேற்சொன்ன ஜெகதீஷ் நீதிமன்ற விசாரணைக்கு 3 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து ஜெகதீைஷ தேவர்குளம் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று முன்தினம் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com