ஆலங்குளம் அருகே காற்றாலை மேலாளர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது

ஆலங்குளம் அருகே காற்றாலை மேலாளர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குளம் அருகே காற்றாலை மேலாளர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

ஆலங்குளம், மே:

ஆலங்குளம் அருகே சுப்பையாபுரத்தில் தனியார் சோலார் மின் நிறுவனம் உள்ளது. இங்கு சென்னை கொரட்டூரைச் சேர்ந்த தியாகராஜன் (வயது 51) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த மார்ச் மாதம் 31-ந் தேதி இவர் பணியில் இருந்தபோது, அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம கும்பல் தியாகராஜனை சரமாரியாக வெட்டியது. இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கார்த்திக் (22), சத்யா (21), காளிராஜன் (24), முருகன் (39) ஆகிய 4 பேர், அம்பை கோர்ட்டில் சரண் அடைந்திருந்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான நெட்டூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்ற சுரேஷ் கண்ணன் தலைமறைவாகி இருந்தார். அவரை ஆலங்குளம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com