

புளியங்குடி:
புளியங்குடி-தென்காசி மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் திருட முயற்சிப்பதாக புளியங்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர் டி.என்.புதுக்குடி சிவராம நாடார் 6-வது தெருவைச் சேர்ந்த தங்கையா மகன் கார்த்திக் (வயது 20) என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு புளியங்குடி பாம்புகோவில் சந்தை ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையின் சுவரில் துளை போட்டு திருட முயன்ற வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.