காஞ்சீபுரம் அருகே 1 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது

காஞ்சீபுரம் அருகே 1 டன் ரேஷன் அரிசியை கடத்த முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் அருகே 1 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது
Published on

ரகசிய தகவல்

காஞ்சீபுரம் அருகே படுநெல்லி கிராமம் பெருமாள் கோவிலின் பின்புறம் ரேஷன் அரிசி கடத்தபடுவதாக காஞ்சீபுரம் குடிமைப்பொருள் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குடிமைப் பொருள் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 21 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி அடுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. அதன் அருகில், ஒரு ஆசாமி போலீசாரை கண்டதும் தப்பி ஓடினான்.

கைது

இதனையடுத்து போலீசார், அவரை விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். தப்ப முயன்ற மர்ம ஆசாமியை போலீஸ் நிலையம் கொண்டு போய் விசாரித்தனர். விசாரணையில் தப்ப முயன்றவர் அதே பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 48) என்பதும், ரேஷன் அரிசியை கடத்துவதற்காக பதுக்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com