புஞ்சைபுளியம்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

புஞ்சைபுளியம்பட்டி அருகே தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
புஞ்சைபுளியம்பட்டி அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
Published on

புஞ்சைபுளியம்பட்டி,

புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நொச்சிக்குட்டையில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்தார். அருகில் விஷ பாட்டில் கிடந்தது. இதை பார்த்த பொதுமக்கள் புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இறந்தவர் புஞ்சைபுளியம்பட்டி மாரியம்மன் கோவில் வீதியில் வசித்து வந்த பொன்னுசாமி (வயது 50) என்பதும், தொழிலாளியான இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும், அவருக்கு செல்வி (39) என்ற மனைவியும், சந்தோஷ் என்ற மகனும் பவித்ரா என்ற மகளும் உள்ளது தெரியவந்தது.

பொன்னுசாமி என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com