தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரெயில் மோதி வாலிபர் பலி

தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரெயில் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது மின்சார ரெயில் மோதி வாலிபர் பலி
Published on

சென்னை எழும்பூர்-பூங்கா ரெயில் நிலையத்துக்கு இடைப்பட்ட வழித்தடத்தில் நேற்று காலை 25 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த எழும்பூர் ரெயில்வே போலீசார் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அடையாளம் தெரியாத அந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com