தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து

கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ராஜூ மகன் வெங்கடேஷ் குமார் (வயது 47). இவர் அதே பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று காலை 7 மணிக்கு தொழிலாளர்கள் வேலைக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது மருந்து குச்சியில் திடீரென தீப்பிடித்தது. இதனால் தொழிலாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் மூலப்பொருட்கள், தீப்பெட்டி பண்டல்கள் மற்றும் கட்டிடம் ஆகியவை தீ விபத்தில் சேதமடைந்தன. இதில் ரூ.1 லட்சம் வரை சேதம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சாலை உரிமையாளர் வெங்கடேஷ் குமார் தெரிவித்தார். கிழக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com