சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் கைது

திண்டுக்கல் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக்கை போலீசார் கைது செய்தனர்.
சிறுமியை கர்ப்பமாக்கிய மெக்கானிக் கைது
Published on

திண்டுக்கல் :

திண்டுக்கல் அருகே உள்ள சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 19). மெக்கானிக். இவர் திண்டுக்கல்லில் ஒரு ஒர்க்சாப்பில் வேலை செய்கிறார்.

இந்த நிலையில் 18 வயது நிரம்பாத ஒரு சிறுமியுடன், சரவணக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் கர்ப்பமான சிறுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதையடுத்து சிறுமியின் தரப்பில் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணக்குமாரை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com