தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்

தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
தேர்தல் அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
Published on

சீர்காழி:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் நாராயணன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இப்ராஹிம், நகராட்சி மேலாளர் காதர் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உதவி கலெக்டர் நாராயணன் கலந்துகொண்டு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். மேலும் தேர்தல் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நேர்மையாக பணியாற்றவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் டாக்டர் கனிமொழி, நகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com