வியாபாரியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம், வியாபாரியை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வியாபாரியை கத்தியால் குத்திய தொழிலாளி கைது
Published on

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 45). வியாபாரி. இவர் ரெயிலில் சிறு வியாபாரம் செய்து வருகிறார். இவரது பொருட்களை அதே கிராமத்தை சேர்ந்த பாபு (45) என்பவர் எடுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முன்விரோதம் காரணமாக நாகராஜை கூலித்தொழிலாளி பாபு கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த நாகராஜ், கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com