கடலூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

கடலூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடலூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு
Published on

கடலூர்,

கடலூர் நகர அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடலூரில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு நகர செயலாளர் குமரன் தலைமையில் மாவட்ட அவை தலைவர் அய்யப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட துணை செயலாளர் முருகுமணி, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பரசன், முன்னாள் நகரசபை துணை தலைவர் சேவல்குமார், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் டாக்டர் சீனுவாசராஜா, நகர துணை செயலாளர் கந்தன், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி.பெருமாள், ரவிச்சந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் வக்கீல் பாலகிருஷ்ணன், ஆர்.வி.மணி, தமிழ்ச்செல்வன், அன்பு, மாவட்ட பிரதிநிதி வெங்கட்ராமன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் ஜே.கண்ணன், முன்னாள் ஒன்றிய துணை செயலாளர் ஏழுமலை உள்பட கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

கடலூரில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் அணி நகர செயலாளர் சி.கே.எஸ். கார்த்திகேயன் தலைமையில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் நகரசபை தலைவர் சி.கே.சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், வினோத், சிவகுருநாதன், பாஷா, சந்தானம், ஜெயச்சந்திரன், ரவி, முத்து, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எம்.ஜி.ஆர்., அம்மா, தீபா பேரவை சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடலூரில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி மாலை அணிவித்தார். இதில் மாவட்ட தலைவர் ரங்கா, நிர்வாகிகள் பாலு, சரவணன், சதீஷ்குமார், நகர செயலாளர் பிரபாகரன், ஒன்றிய நிர்வாகிகள் ஜெயபால், காசிநாதன், தணிகாசலம், பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. சார்பில் எம்.ஜி.ஆர். நினைவுதினம் கடலூரில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது சிலைக்கு மாவட்ட செயலாளர் சிவக்கொழுந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட அவை தலைவர் ராஜாராம் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் வேதநாயகம், மாவட்ட துணை செயலாளர் லெனின், மாநில செயற்குழு உறுப்பினர் வைத்தியநாதன், நகர பொருளாளர் தர்மபாலன், ஒன்றிய செயலாளர் சித்தநாதன், மாவட்ட பிரதிநிதி அருள், நகர துணை செயலாளர் பழனியம்மாள், நிர்வாகி நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு சார்பில் எம்.ஜி.ஆர். நினைவு தினம் கடலூர் வன்னியர்பாளையத்தில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு வக்கீல் பிரிவு மாவட்ட செயலாளர் ரவீந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் இணை செயலாளர் சாமிக்கண்ணு, துணை செயலாளர் சார்லஸ்ராஜ், ஜெகநாதன், செந்தில்குமார், பாலசங்கர், சுந்தரகணபதி, ரவிச்சந்திரன், பார்த்தசாரதி, சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com