எருமப்பட்டி அருகே, பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் - கொள்முதல் விலையை உயர்த்தக்கோரிக்கை

எருமப்பட்டி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எருமப்பட்டி அருகே, பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் - கொள்முதல் விலையை உயர்த்தக்கோரிக்கை
Published on

எருமப்பட்டி,

எருமப்பட்டி அருகே உள்ள பவித்திரம் புதூரில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட உதவி செயலாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மணி செல்லமுத்து, ராஜேந்திரன், தனபால், தமிழ்செல்வன், கருப்பண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், விலைவாசி ஏற்றத்திற்கேற்ப பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் குழந்தைகளுக்கு ஆவின் பாலையும் சேர்த்து வழங்க வேண்டும், கால்நடை தீவனங்களை 50 சதவீதம் மானிய விலையில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சதாசிவம், மாவட்ட தலைவர் முத்துசாமி, பெருமாள் மற்றும் விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com