சிறுபான்மையின கைத்தறி, கைவினை கலைஞர்கள் புதிய கடனுதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

சிறுபான்மையின கைத்தறி, கைவினை கலைஞர்கள் புதிய கடனுதவி திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சிறுபான்மையின கைத்தறி, கைவினை கலைஞர்கள் புதிய கடனுதவி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
Published on

திருவண்ணாமலை,

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுகழகம் மூலமாக கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்கள் பயன்பெற VI-R-A-S-AT என்ற புதிய திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் கைவினைப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஏழை சிறுபான்மையின கைத்தறி மற்றும் கலைஞர்களுக்கு தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி நிதிக்கழகம் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்கள் மூலப்பொருட்கள், கருவிகள் எந்திரங்கள் போன்றவற்றை வாங்குவதற்காக VI-R-A-S-AT என்ற பெயரில் குறைந்த வட்டி விகிதத்தில் புதிய கடனுதவி திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.10 லட்சம்

இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி தேவைப்படும் சிறுபான்மையின கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர் புறமாக இருந்தால் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகமாலும், கிராமபுறமாக இருந்தால் ரூ.98 ஆயிரத்துக்கு மிகமாலும் இருத்தல் வேண்டும்.

ஆண் கைவினை கலைஞர்களுக்கு 5 சதவீதம் வட்டி விகிதமும், பெண் கைவினை கலைஞர்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை இனத்தை சார்ந்த கிறிஸ்துவ, முஸ்லிம், புத்த, சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் இனத்தவர்கள் கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்கள் உரிய ஆவணங்களான ரேஷன் கார்டு, சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, வருமனச்சான்று, புகைப்படம், தொழில் குறித்த விவரம் அல்லது திட்டஅறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கிகள் கோரும் இதர ஆவணங்களை திருவண்ணாமலை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். எனவே இந்த திட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையின மக்களும் கடனுதவி பெற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com