காணாமல் போன பெண், 3 குழந்தைகள் வனப்பகுதியில் பிணமாக மீட்பு - கணவர் தற்கொலை முயற்சி

காணாமல் போன பெண், 3 குழந்தைகள் வனப்பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டனர். இதையறிந்த பெண்ணின் கணவர் தற்கொலைக்கு முயன்றார்.
காணாமல் போன பெண், 3 குழந்தைகள் வனப்பகுதியில் பிணமாக மீட்பு - கணவர் தற்கொலை முயற்சி
Published on

தானே,

தானே மாவட்டம் பிவண்டி தாலுகா பச்சாபுர் வனப்பகுதியில் நேற்று முன்தினம் ஒரு மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் பெண் ஒருவரும், 3 குழந்தைகளின் உடல்களும் அழுகிய நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் பட்கா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பிவண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடத்திய விசாரணையில், இறந்த பெண் ரஞ்சனா பங்காரி (வயது30) எனவும், 6 முதல் 12 வயதுயுடைய அவரது 2 மகள்கள் மற்றும் மகன் என்பதும் தெரியவந்தது.

இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி காணாமல் போனதாக போலீசில் அளிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இந்தநிலையில் தற்கொலை செய்து கொண்ட ரஞ்சனா பங்காரின் கணவர் ஸ்ரீபத் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். போலீசார் உடனே அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com