

சென்னை திருவல்லிக்கேணி குளக்கரை தெருவில் வீட்டில் தனியாக இருந்த சீனிவாச வரதன்(வயது 73) என்ற முதியவரிடம் மர்ம நபர் ஒருவர், அவரது மகனுக்கு நல்ல வரன் இருப்பதாக சொல்லி ஏமாற்றி, வீட்டின் பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகையை திருடிச்சென்று விட்டார்.
அதே பகுதியில் தனியாக வசித்த அனுராதா என்ற 75 வயது மூதாட்டியிடமும், அதே மர்ம நபர் ரூ.15 ஆயிரத்தை அபகரித்து போய் விட்டார். இது தொடர்பாக ஐஸ்-அவுஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை-பணத்தை அபகரித்துச்சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்கள்.