மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி, கணவருடன் சென்ற பெண் பஸ் மோதி பலி

மொபட் சக்கரத்தில் சேலை சிக்கியதால் கணவருடன் மொபட்டில் சென்ற பெண் பஸ் மோதி பலியானார்.
மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி, கணவருடன் சென்ற பெண் பஸ் மோதி பலி
Published on

மலைக்கோட்டை,

திருச்சி ஜீவாநகர் காந்திதெருவை சேர்ந்தவர் முருகேசன்(வயது 57). இவருடைய மனைவி தனலெட்சுமி(52). இவர்கள் இருவரும் மொபட்டில் காந்திமார்க்கெட் வெல்லமண்டிரோட்டில் சோலாப்பூர் மாரியம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது மொபட் சக்கரத்தில் தனலெட்சுமியின் சேலை சிக்கியது.

இதில் கணவன், மனைவி இருவரும் தடுமாறி கீழே விழுந்தனர். அப்போது பின்னால் வந்த டவுன் பஸ் அவர்கள் மீது மோதியது. இதில் முருகேசனும், தனலெட்சுமியும் படுகாயம் அடைந்தனர். இதில் தனலெட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை கண்ட அந்த பகுதியினர் முருகேசனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com