மகனை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை

தேனி அருகே கடன் பிரச்சினையால் மகனை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
மகனை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை
Published on

தேனி :

கூலித்தொழிலாளி

தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுருளி (வயது 48). கூலித்தொழிலாளி.

இவருடைய மனைவி தங்கவேல். இவர்களுக்கு வீரமணி, பெருமாள் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தங்கவேலுக்கு மனநிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து அவரை அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் வைத்து பராமரித்து வந்தனர்.

கடன் பிரச்சினை

சுருளி, தனது 2 மகன்களுடன் ஒரு வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் திருமணமாகி விவாகரத்தான முத்துலட்சுமி (33) என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுருளி 2-வது திருமணம் செய்து கொண்டார்.

முத்துலட்சுமிக்கு, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் சக்திவேல் (9) என்ற மகன் இருந்தான்.

புதிதாக வீடு கட்டியது, முதல் மனைவியின் மகன் வீரமணிக்கு திருமணம் செய்து வைத்ததில் சுருளி கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. வீரமணி திருமணத்துக்கு பின் வேறு ஊருக்கு சென்று விட்டார்.

கடன் பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

தற்கொலை

இதனால் முத்துலட்சுமி மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் சுருளி வேலைக்கு சென்று விட்டார்.

வீட்டில் இருந்த முத்துலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். மனதை கல்லாக்கி கொண்டு, முதலில் தன்னுடைய மகன் சக்திவேலுக்கு அரளி விதையை அரைத்து சாப்பாட்டில் கலந்து கொடுத்தார்.

பின்னர் தானும் அதனை சாப்பிட்டார். இருவரும் உயிருக்கு போராடினர்.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து முத்துலட்சுமியை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். உயிருக்கு போராடி கொண்டிருந்த சக்திவேலை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவன் பரிதாபமாக இறந்தான்.

போலீஸ் விசாரணை

தகவலறிந்த கண்டமனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னா தாய்-மகன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடன் பிரச்சினை காரணமாக மகனை கொன்று விட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com