பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி

பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பரிதாபமாக பலியானார்.
பேரம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் விவசாயி பலி
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள மப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 44). விவசாயி. இவர் கடந்த 13-ந் தேதி மோட்டார் சைக்கிளில் பேரம்பாக்கத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சத்தரை சந்திப்பு பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கீழே விழுந்தது.

இதில் லோகநாதன் படு காயம் அடைந்தார். அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மப்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com