கும்மிடிப்பூண்டியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; கொத்தனார் பலி

கும்மிடிப்பூண்டி பகுதியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கொத்தனார் பலியானார்.
கும்மிடிப்பூண்டியில் மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; கொத்தனார் பலி
Published on

மின்கம்பத்தில் மோதல்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் மங்கலம் ஊராட்சியை சேர்ந்த ஆத்துமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் தங்கராஜ் (வயது 34). கொத்தனாரான இவர், நேற்று மங்கலம் கிராமத்தில் இருந்து ஆத்துமேடு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தங்கராஜை அருகிலிருந்தவர்கள் மீட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து ஆரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயவேல் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com