

விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் உச்சிமேடு தெருவை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 49). இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் பாபநாசத்தில் இருந்து விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பூதப்பாண்டி மகன் வனத்துரை (20) என்பவர் மற்றொரு மோட்டார்சைக்கிளில் விக்கிரமசிங்கபுரத்தில் இருந்து தனது வீட்டிற்கு டானா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
விக்கிரமசிங்கபுரம் பனையடியான் கோவில் அருகே வரும்போது 2 மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். மாரியப்பன் அம்பை அரசு ஆஸ்பத்திரியிலும், வனத்துரை நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.