மோட்டார்சைக்கிள் திருட்டு

நெல்லையில் மோட்டார்சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றார்.
மோட்டார்சைக்கிள் திருட்டு
Published on

நெல்லை:

நெல்லை ராமையன் பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் அய்யப்பன் (வயது 32). இவர் பாளையங்கோட்டை முருகன் குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அய்யப்பன் நிறுவனத்தின் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதனை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com