மோட்டார்சைக்கிள் திருட்டு

சிவகிரி அருகே மோட்டார்சைக்கிள் திருட்டு போனது.
மோட்டார்சைக்கிள் திருட்டு
Published on

சிவகிரி:

சிவகிரி அருகே அருளாட்சி என்ற திருமலாபுரம் இந்திரா நகர் காலனி தெருவைச் சேர்ந்தவர் மாசிலாமணி. இவருடைய மகன் ராஜா (வயது 30). இவர் சிவகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளை நிறுவனத்தின் முன்பாக நிறுத்தி இருந்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றார். பின்னர் நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த ராஜா, தனது மோட்டார் சைக்கிள் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com