தொழிலாளி மர்ம சாவு

தொழிலாளி மர்மமான முறையில் இறந்தார்.
தொழிலாளி மர்ம சாவு
Published on

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அயன் சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 57). கூலித்தொழிலாளியான இவர் வேட்டக்குடி சாலையில் தனியாக கொட்டகை அமைத்து தங்கி வந்தார். இவர் குடிப்பழக்கம் உடையவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் ராமலிங்கம் மயங்கி கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது அண்ணன் ராஜசேகர், ராமலிங்கத்தை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சர்த்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக வெங்கனூர் போலீசில் ராஜசேகர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com