ஆலங்காயம் அருகே ‘பப்ஜி’ விளையாடிய மாணவனை பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை

ஆலங்காயம் அருகே பப்ஜி விளையாடிய மாணவனை பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்காயம் அருகே ‘பப்ஜி’ விளையாடிய மாணவனை பெற்றோர் கண்டித்ததால் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

வாணியம்பாடி,

ஆலங்காயத்தை அடுத்த கோமூட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் சீனிவாசன் (வயது 17). 12-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் வீட்டில் செல்போனில் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார். அவரின் விளையாட்டு அதிகாலை வரை நீடித்தது. பெற்றோர், மகனை கண்டித்தனர். பெருமாள், மகனிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டார். இதனால் மனமுடைந்த சீனிவாசன் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது, தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஆலங்காயம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, அவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com