ஆம்பூர் அருகே; மின்சாரம் தாக்கி மாணவன் பலி

ஆம்பூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஆம்பூர் அருகே; மின்சாரம் தாக்கி மாணவன் பலி
Published on

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூர் ஏரிக்கோடி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 44). வாணியம்பாடி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இவரது மனைவி ரம்யா. இவர்களது மூத்த மகன் ஆஷிஸ் (வயது 11) ஆம்பூரில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் இரவு ஆம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் வீட்டில் உள்ள சுவிட்சை ஆஷிஷ் போட்டபோது மின் கசிவால் அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கியதில் ஆஷிஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

தகவல் அறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆஷிஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com