அந்தியூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

அந்தியூர் அருகே வேறு சமூகத்தை சேர்ந்தவர்களை மகளும், மகனும் திருமணம் செய்து கொண்டதால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டனர்.
அந்தியூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள ஜெ.ஜெ.நரை சேர்ந்தவர் சித்தையன் (வயது 42). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மீனாட்சி (வயது 40). இவர்களுக்கு வளர்மதி என்ற மகளும், அங்கப்பன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மகளும், மகனும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சித்தையன் மனமுடைந்து காணப்பட்டார்.

எனவே இனி வாழ்வதை விட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்த அவர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள விட்டத்தில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சித்தையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com