ஆரணி அருகே மொபட் மீது வேன் மோதல்; வாலிபர் பலி

ஆரணி அருகே மொபட் மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
ஆரணி அருகே மொபட் மீது வேன் மோதல்; வாலிபர் பலி
Published on

ஆரணி,

ஆரணியை அடுத்த ஆகாரம் கிராமம், களத்துமேட்டு தெரு சத்யா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் விமல் (வயது 18). நேற்று இவர் மொபட்டில் ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதற்காக ரோட்டை கடக்க முயன்றார். அப்போது விழுப்புரத்தில் இருந்து ஆரணி நோக்கி வந்த வேன் திடீரென மொபட் மீது மோதியது. இதில் விமல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com