செங்கல்பட்டு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

செங்கல்பட்டு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியானார்கள்.
செங்கல்பட்டு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
Published on

செங்கல்பட்டு,

செங்கல்பட்டை அடுத்த கரும்பாக்கத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). முள்ளிப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் பிரதாப்(19). இருவரும் நண்பர்கள். நேற்று அதிகாலை இருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கூட்ரோடு பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர பனைமரத்தில் மோதியது.

இதில் சூர்யாவும், பிரதாப்பும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com