காஞ்சீபுரம் அருகே பாம்பு கடித்து முதியவர் சாவு

காஞ்சீபுரம் அருகே பாம்பு கடித்து முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம் அருகே பாம்பு கடித்து முதியவர் சாவு
Published on

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த முசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 83). இவர் தனது வீட்டில் இருந்தபோது திடீரென பாம்பு கடித்து விட்டது. இதில் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com