கந்திகுப்பம் அருகே மரத்தூள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது

கந்திகுப்பம் அருகே மரத்தூள் ஏற்றி வந்த லாரி தீப் பிடித்து எரிந்தது.
கந்திகுப்பம் அருகே மரத்தூள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது
Published on

பர்கூர்,

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தேவகுமார் (வயது 30). லாரி டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஹரி (28). கிளனர். இவர்கள் 2 பேரும் நேற்று இரவு வாணியம்பாடியில் இருந்து பெங்களூருக்கு மரத்தூள் ஏற்றிக் கொண்டு லாரியில் சென்று கொண்டிருந்தனர்.

நள்ளிரவு லாரி கிருஷ்ணகிரி-சென்னை தேசிய நெடுஞ்சாலை கந்திகுப்பம் பெட்ரோல் பங்க் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக தீப்பிடித்துக் கொண்டது. இதை கவனித்த தேவகுமார், ஹரி லாரியை சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்கள். லாரியில் தீப்பிடித்து எரிவதை கண்ட அந்த பகுதி மக்கள் இது குறித்து கிருஷ்ணகிரி மற்றும் பர்கூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் கிளனர் ஹரிக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com