கண்டமனூர் அருகே, ராணுவ வீரர் தற்கொலை - மனைவியின் கண் முன்னே விஷத்தை குடித்தார்

கண்டமனூர் அருகே மனைவியின் கண் முன்னே விஷத்தை குடித்து ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கண்டமனூர் அருகே, ராணுவ வீரர் தற்கொலை - மனைவியின் கண் முன்னே விஷத்தை குடித்தார்
Published on

கண்டமனூர்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பூதிப்புரத்தை சேர்ந்தவர் சின்னராஜா (வயது 29). இவர், ராணுவ வீரராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே உள்ள குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரேமா (20) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 மாதத்தில் கொடியம்மாள் என்ற பெண் குழந்தை உள்ளது.

கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கோபித்து கொண்டு பிரேமா, குப்பிநாயக்கன்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்தார். இந்தநிலையில் 2 மாதம் விடுமுறை எடுத்து சின்னராஜா சொந்த ஊருக்கு வந்திருந்தார். இதையடுத்து குப்பிநாயக்கன்பட்டிக்கு சென்ற சின்னராஜா, தனது மனைவி பிரேமாவை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.

ஆனால் பிரேமா வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சின்னராஜாவுக்கும், பிரேமாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சின்னராஜா தனது மனைவியின் கண் முன்னே விஷத்தை குடித்தார். பின்னர் அவர் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பிரேமாவின் குடும்பத்தினர் சின்னராஜாவை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com