நல்லம்பள்ளி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

நல்லம்பள்ளி அருகே உள்ள வடக்கு கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நல்லம்பள்ளி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள வடக்கு கொட்டாவூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 27). பி.எஸ்.சி. பி.எட். பட்டதாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விவசாய தானியங்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தபோது தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதற்காக அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் சிலம்பரசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் சிலம்பரசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com