நந்திவரம் அருகே சாலையோரம் திறந்து இருக்கும் கழிவுநீர் கால்வாய் வாகன ஓட்டிகள் அச்சம்

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இருந்து கொட்டமேடு செல்லும் சாலையில் நந்திவரம் புற்றுக்கோயில் அருகே சாலையோரம் திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
நந்திவரம் அருகே சாலையோரம் திறந்து இருக்கும் கழிவுநீர் கால்வாய் வாகன ஓட்டிகள் அச்சம்
Published on

வண்டலூர்,

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். இந்த சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லும்போது விபத்துகள் ஏற்படுகிறது.

இதனால் சாலையோரம் அபாயகரமாக அமைந்துள்ள திறந்தவெளி கழிவுநீர் கால்வாயை உடனடியாக நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சி நிர்வாகம் சிமெண்டு பலகைகளால் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com