நன்னிலம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

நன்னிலம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
நன்னிலம் அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
Published on

நன்னிலம்,

நன்னிலம் அருகே உள்ள விசலூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகள் திவ்யா(வயது23). இவர் அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இந்தநிலையில் நேற்று வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த திவ்யாவின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திவ்யாவின் தாய் ஜோதி நன்னிலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com