நொய்யல் அருகே பொதுப்பணித்துறை நீர்ப்பாசன உதவியாளர் மர்ம சாவு

நொய்யல் அருகே பொதுப்பணித்துறை நீர்ப்பாசன உதவியாளர் மர்மமான முறையில் இறந்தார்.
நொய்யல் அருகே பொதுப்பணித்துறை நீர்ப்பாசன உதவியாளர் மர்ம சாவு
Published on

வேலாயுதம்பாளையம்,

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள சிறுமயன்குடி கிராமத்தை சேர்ந்தவர் கமலஹாசன் (வயது 44). இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆற்றின் பொதுப்பணித்துறையில் நீர்ப்பாசன உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் திருச்சியில் இருந்து கரூருக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கம். மேலும் குடிபழக்கத்திற்கும் அடிமையாகி இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவில் அருகே கமலஹாசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கமலஹாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com