ஒரகடம் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி - வாலிபர் பலி

ஒரகடம் பகுதியில் இருந்து செரப்பனஞ்சேரி நோக்கி வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
ஒரகடம் அருகே சாலை தடுப்புச்சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி - வாலிபர் பலி
Published on

படப்பை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சாலைப்பாக்கம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் குப்பன். இவருடைய மகன் விஜய் (வயது 19). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள செரப்பனஞ்சேரி பகுதியில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு ஒரகடம் பகுதியில் இருந்து செரப்பனஞ்சேரி நோக்கி வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது செரப்பனஞ்சேரி அருகே வந்தபோது, நிலை தடுமாறி சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்த விஜய் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஒரகடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com