ஓட்டப்பிடாரம் அருகே, மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி - தோட்டத்தில் வேலை செய்தபோது பரிதாபம்

ஓட்டப்பிடாரம் அருகே தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்னல் தாக்கி 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.
ஓட்டப்பிடாரம் அருகே, மின்னல் தாக்கி 2 பெண்கள் பலி - தோட்டத்தில் வேலை செய்தபோது பரிதாபம்
Published on

ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள தெற்கு செவல்பட்டி காலனி தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவருடைய மனைவி சரசுவதி (வயது 65). அதே பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மனைவி கருப்பாயி அம்மாள் (35). இந்த நிலையில் சரசுவதி, கருப்பாயி அம்மாள் ஆகிய 2 பேரும் நேற்று அந்த பகுதியில் உள்ள எலுமிச்சை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.

நேற்று மாலை அந்த பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அப்போது திடீரென கருப்பாயி அம்மாள், சரசுவதி ஆகியோர் மீது மின்னல் தாக்கியது. இதில் அவர்கள் இருவரும் உடல் கருகிய நிலையில் கிடந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக 2 பேரையும் மீட்டு பசுவந்தனை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே கருப்பாயி அம்மாள், சரசுவதி ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமொழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த கருப்பாயி அம்மா ளுக்கு 3 மகன்கள், ஒரு மகளும், சரசுவதிக்கு 4 மகள்கள், 2 மகன்களும் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com