சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு

சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
சங்கரன்கோவில் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் சாவு
Published on

சங்கரன்கோவில்,

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள இலவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் மின்வாரியத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். முருகன் நேற்று சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் உள்ள மின்கம்பத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக முருகன் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கி விழுந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் முருகனை மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி மின்வாரிய ஊழியர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com