ஸ்ரீவைகுண்டம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

ஸ்ரீவைகுண்டம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஸ்ரீவைகுண்டம் அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை
Published on

ஸ்ரீவைகுண்டம்,

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முன்னீர்காலனியை சேர்ந்தவர் முத்துசெல்வம். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரலேகா (வயது 25). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

சந்திரலேகா கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவைகுண்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன் விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com