அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் சாவு

அரக்கோணம் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான்.
அரக்கோணம் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் சாவு
Published on

அரக்கோணம்,

அரக்கோணம் அருகே உள்ள நம்மாநேரி கிராமத்தை சேர்ந்தவர் மகிமைராஜ் (வயது 30), ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜான்சிராணி (26). இவர்களது மகன் சியோன்ராஜ் (10). ஜான்சிராணி நேற்று அதே பகுதியில் உள்ள ஏரியில் வாத்துகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஏரி அருகே விளையாடிக்கொண்டிருந்த சியோன்ராஜ் ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கினான். அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் அவனை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவனை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே சியோன்ராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com