அரக்கோணம் அருகே, மரத்தில் பஸ் மோதி 17 பேர் படுகாயம்

அரக்கோணம் அருகே அரசு பஸ் மரத்தில் மோதி 17 படுகாயமடைந்தனர்.
அரக்கோணம் அருகே, மரத்தில் பஸ் மோதி 17 பேர் படுகாயம்
Published on

அரக்கோணம்,

திருப்பதியில் இருந்து காஞ்சீபுரம் நோக்கி 35 பயணிகளுடன் அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. அரக்கோணம் அருகே உள்ள கல்லாறை கடந்து சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சேஷாகிரி, குப்தா, வெங்கட்ராம், திருத்தணியை சேர்ந்த ராமச்சந்திரன், மகாலட்சுமி, காஞ்சீபுரத்தை சேர்ந்த பாலமுருகன் உள்பட 17 பேர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் மற்றும் அரக்கோணம் தாசில்தார் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுதொடர்பாக போலீசாமரத்தில் பஸ் மோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com