திருப்போரூர் அருகே கல்லால் தாக்கி வாலிபர் கொலை

திருப்போரூர் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.
திருப்போரூர் அருகே கல்லால் தாக்கி வாலிபர் கொலை
Published on

திருப்போரூர்,

திருப்போரூர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் ரவி. கூலித்தொழிலாளி. இவரது மகன் அஜித் (வயது 23). நேற்று முன்தினம் வீட்டை வீட்டு வெளியில் சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. மாயமாகி விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை ஆமூர் பெரிய ஏரிக்கரை வழியாக சென்றவர்கள் காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பது குறித்து மானாமதி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் அஜித் என்பது தெரியவந்தது.

ஆமூர் ஏரிக்கரையில் உள்ள முள்புதரில் மர்ம நபர்கள் அஜித்தை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு உடலை வீசிச்சென்றது தெரியவந்தது.

கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக மானாமதி போலீசார் தொடர்நது விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com