திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண் பலாத்காரம்; கட்டிட தொழிலாளி கைது

திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
திருவெண்ணெய்நல்லூர் அருகே பெண் பலாத்காரம்; கட்டிட தொழிலாளி கைது
Published on

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பிரபா என்கிற பிரபாகரன் (வயது 26), கட்டிட தொழிலாளி.

இவர் அதே கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். அப்போது அவரை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர், இதுபற்றி திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com