திருவெறும்பூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர், வாய்க்காலில் தவறி விழுந்து பலி

திருவெறும்பூர் அருகே, ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
திருவெறும்பூர் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர், வாய்க்காலில் தவறி விழுந்து பலி
Published on

திருவெறும்பூர்,

திருவெறும்பூரை அடுத்த நவல்பட்டு அருகே உள்ள அண்ணா நகர் பகுதி 2-ல் வசித்து வந்தவர் கருப்பையா(வயது 50). இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பாக்யலெட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள். இதில் மூத்த மகன் ராஜேஷ் கண்ணா சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் ராகுல்கிரண் என்.ஐ.டி.யில் படித்து வருகிறார்.

கருப்பையாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் நேற்று முன்தினம் இரவு நவல்பட்டு பர்மா காலனி காவேரி நகரில் உள்ள தண்ணீர் இல்லாத வாய்க்காலின் பாலம் அருகே அமர்ந்து அதிக அளவு மது குடித்துள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கு செல்வதற்காக எழுந்தபோது, வாய்க்கால் பாலத்தில் இருந்து தவறி வாய்க்காலில் விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பையாவின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com