திருப்போரூர் அருகே 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் என்ஜினீயர் சாவு

5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கம்ப்யூட்டர் பெண் என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார்.
திருப்போரூர் அருகே 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் என்ஜினீயர் சாவு
Published on

திருப்போரூர்,

சேலத்தை சேர்ந்தவர் அப்பாதுரை. இவரது மகள் ஊர்மிளா (வயது 25). கம்ப்யூட்டர் என்ஜினீயர். அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் திருப்போரூரை அடுத்த நாவலூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில், கடந்த 8 மாதமாக பணிபுரிந்து வந்தார்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் உள்ள 5-வது மாடியில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த தாழம்பூர் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com