திருப்பூர் அருகே, டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலி

திருப்பூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 3-ம் வகுப்பு மாணவன் பலியானான்.
திருப்பூர் அருகே, டெங்கு காய்ச்சலுக்கு மாணவன் பலி
Published on

வீரபாண்டி,

திருப்பூர் அருகே மங்கலம் ஆர்.டி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (வயது 38). இவர் மங்கலம் பகுதியில் ஓட்டல் வைத்து உள்ளார். இவரது 2-வது மகனான முகமது பாகீஸ் (வயது 8) அதே பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக முகமது பாகீஸ் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். உடனே அவனை பெற்றோர் அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். காய்ச்சல் குணமாகாததால் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிறுவனை அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்கள் சிறுவனை பரிசோதித்த போது டெங்கு பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி முகமது பாகீஸ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மங்கலம் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மங்கலம் பகுதியில் சுகாதார பணிகளை முடுக்கி விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com